விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

சித்திரைக்கனி - தமிழ்ப் புத்தாண்டு

சித்திரைக்கனி எனும் தமிழ்ப்புத்தாண்டு விழாவானது ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாள் நமது காட்டம்பட்டியில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும்.

புகைப்படங்கள்



காலையில் சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பான முறையில் பூஜை செய்யப்படும் மற்றும் ஊர் மக்களால் விநாயகருக்கு பொங்கல் வைக்கப்படும். அதன் பிறகு காலை முதல் மாலை வரை சிறுவர் முதல் பெரியவர் வரை அணைத்து தரப்பினருக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மற்றும் ஒரு சில ஆண்டுகளில் விளையாட்டு போட்டிகளுக்கு பதிலாக ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை விநாயகர் ஆலயத்தை நோக்கி மாவிளக்கு எடுக்கும் நிகழ்வு நடைபெறும். இரவு சிறப்பு வழிபாடு செய்து முடித்து சித்திரைக்கனி விழாவானது நிறைவுறும்.




No comments:

Post a Comment