விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வளர் இளம் நற்பணி சங்கம்


வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் காட்டம்பட்டியில் உள்ள இளைஞர்களால் கிராமத்தின் அனைத்துவிதமான வாழ்வியல் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது.

நமது வளர் இளம் நற்பணி சங்கமானது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. தமிழக சங்க அரசியல் அமைப்புச்சட்டம் 1975 - ன் கீழ் இந்த சங்கம் பதிவு செய்யப்பட்டு உள்ளது - (அரசு பதிவு எண் - 303 / 2017 )

தமிழக அரசின் சங்க பதிவு சான்றிதழ் : 
இந்த இயக்கமானது நேரு யுவ கேந்திர எனும் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது (பதிவு எண் - 524 / 2017 ) .

அரசியல் மற்றும் எந்த வித சாதி மத பாகுபாடு இல்லாமல் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் இயங்கும் ஒரு சிறந்த இயக்கமாக உருவாகி இருக்கிறது.


இந்த இயக்கத்தில் மிக முக்கியமான ஐந்து பதவிகளை வகிப்பவர்கள் விவரங்கள் பின்வருமாறு :


பதவி பெயர்
தலைவர் திரு.மதிவாணன் DME
து.தலைவர் திரு.பத்மநாதன் M.Com
செயலாளர் திரு.சக்திவேல் M.Sc
து.செயலாளர் திரு.கார்த்திக் குமார் BE
பொருளாளர் திரு.உதய குமார் BE

No comments:

Post a Comment