விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

தமிழக அரசின் மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் முதல் பரிசு 10000 வென்ற மாணவன்



சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் 
எந்தன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும் 


 தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை எனும் பிரிவு ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி , கட்டுரைப் போட்டி மற்றும் கவிதை போட்டிகளை நடத்தி மாவட்டத்துக்கு இருவர் வீதம் தேர்வு செய்து மாநில அளவிலான போட்டிகளை நடத்தும்.

இதில் ஈரோடு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் 2013 - 2014 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. போட்டியின் தலைப்பானது போட்டி துவங்குவதற்கு 3 நிமிடங்களுக்கு முன் மட்டுமே வழங்கப்படும். கொடுக்கப் பட்ட தலைப்பைப் பற்றி 3 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும்.

நமது ஊர் மாணவன் செல்வன் வே.அன்புமணி முதல் மாணவனாக பேசிய தலைப்பு "இன்றும் தமிழ் என்றும் தமிழ்". இவர் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக இந்த போட்டியில் கலந்து கொண்டார். பலத்த போட்டிகளுக்கிடையில் நமது செல்வன் இந்த மாவட்ட தலை சிறந்த பேச்சாளர் என நடுவார்களால் முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.



முதல் பரிசுக்கான காசோலை ரூ.10000 -ம் மற்றும் சான்றிதழ்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.சரவணன் அவர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இவருக்கு காட்டம்பட்டி மக்கள் மற்றும் வளர் இளம் நற்பணி மன்றம் சார்பாக நாம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

5 comments: